1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (13:06 IST)

எங்கள் வீட்டை தயவுசெய்து இடித்துவிடுங்கள்: முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்த குடியிருப்புவாசிகள்

apartment
எங்கள் வீட்டை தயவுசெய்து இடித்துவிடுங்கள்: முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்த குடியிருப்புவாசிகள்
எங்கள் வீட்டை தயவு செய்து இடித்து விடுங்கள் என உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த குடியிருப்புவாசிகள் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அந்த வீடுகளில் தாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு தரமற்ற கட்டுமான பொருள்கள் கொண்டு கட்டப்பட்டதாகவும் தற்போது வீடுகள் விரிசல் அடைந்திருப்பதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் இருப்பதாகவும் எனவே தானாக இடிந்து விழுவதற்குள்  இந்த குடியிருப்புகளை இடிக்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் குடியிருப்புவாசிகள் வேண்டுகோள் கொடுத்துள்ளனர் 
 
நாங்கள் கஷ்டப்பட்டு 30 வருடங்களாக உழைத்து சம்பாதித்த பணத்தில் வீடு வாங்கினோம் என்றும் ஆனால் அந்த வீட்டில 10 ஆண்டுகள் கூட முழுமையாக இருக்க முடியாத அளவுக்கு வீடு தரமற்ற முறையில் கட்டப்பட்ட இருப்பதாகவும் அவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.