1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 அக்டோபர் 2022 (14:08 IST)

நரபலி.. மனித கறி விருந்து.. குமட்ட வைக்கும் கொடூரம்! – குலைநடுங்க வைத்த கேரள தம்பதி!

Kerala Couples
கேரளாவில் இரண்டு பெண்களை நரபலி கொடுத்து, கொன்று சாப்பிட்ட தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் காலடி பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லின். இவர் கடந்த சில தினங்கள் முன்னர் காணாமல் போனதால் போலீஸார் தேடி வந்தனர். அதேபோல தர்மபுரியை சேர்ந்த பத்மா என்ற பெண் வேலைதேடி எர்ணாகுளம் சென்று தங்கியிருந்த நிலையில் அவரும் திடீரென மாயமானார்.

இதுகுறித்து பத்மாவின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் ஒருநபர் பத்மாவை காரில் அழைத்து சென்றது தெரிய வந்துள்ளது. காரின் உரிமையாளரான முகமது ஷபியை போலீஸார் கைது செய்தபோடு குலைநடுங்க வைக்கும் உண்மைகள் தெரிய வந்துள்ளன.

கேரளாவின் திருவல்லா அருகே உள்ள இலந்தூர் பகுதியை சேர்ந்த வைத்தியரான பகவந்த் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோட் சமீபத்தில் தொழில் நஷ்டம் அடைந்துள்ளனர். அப்போது முகமது ஷபியின் அறிமுகம் இவர்களுக்கு கிடைத்துள்ளது. வீட்டில் செல்வம் பெருக வேண்டுமென்றால் நரபலி கொடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.


இதற்காக பகவந்த் தம்பதி நரபலிக்கான ஆளை தயார் செய்ய முகமது ஷமிக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளனர். அதன்படி முதலாவதாக காலடி பகுதியை சேர்ந்த ரோஸ்லினிடம் படத்தில் நடிக்க வைப்பதாக ஆசைக்காட்டி பகவந்த் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் முகமது ஷமி. அங்கு அவரை கட்டையால் அடித்தும், கழுத்தை அறுத்தும் நரபலி கொடுத்துள்ளனர்.

ஆனாலும் வீட்டில் செல்வம் சேராத நிலையில் மீண்டும் நரபலி கொடுக்க வேண்டுமென முகமது ஷபி சொல்ல, தம்பதியர் மீண்டும் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளனர். இந்த முறை தர்மபுரியை சேர்ந்த பத்மாவை பிடித்து சினிமா ஆசை காட்டி கொண்டு வந்து நரபலி கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த போலீஸார் பகவந்த் – லைலா தம்பதியையும் கைது செய்துள்ளனர். ஆனால் கொடூரம் அத்துடன் நிற்கவில்லை. மேற்கொண்ட விசாரணையில் நரபலி கொடுத்த பெண்களின் கறியை ஆயுள் நீட்டிப்புக்காக தம்பதியர் சாப்பிட்டுள்ளனர். பகவந்த் தனது இளமை நீட்டிக்க நரபலி கொடுத்த பத்மாவின் பிறப்புறுப்பை சாப்பிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார்.


இதுதவிர நிர்வாணமாக பல்வேறு பூஜைகளையும் இந்த தம்பதியினர் முகமது ஷபியோடு இணைந்து செய்ததாகவும், அந்த வழிபாடுகளின்போது பகவந்த் கண் முன்னாலேயே அவரது மனைவி லைலாவுடன் முகமது ஷமி உறவுக் கொண்டதாகவும் விசாரணையில் அவர்களே ஒப்புக்கொண்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இவ்வளவு செய்தும் பணம், செல்வம் வராததால் மூன்றாவதாக ஒரு பெண்ணையும் நரபலி கொடுத்ததாக அவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இறந்த இரண்டு பெண்களின் உடல்களை கண்டெடுத்த போலீஸார் அவற்றை உடற்கூராய்வுக்கு அனுப்பியுள்ளதுடன் மேற்கொண்டு விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேசம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By: Prasanth.K