வியாழன், 7 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2022 (14:54 IST)

பிரசாதம் சாப்பிட்டு வாழ்ந்த முதலை இறந்தது..! – கேரள மக்கள் சோகம்!

Kerala Crocodile
கேரளா மாநிலம் காசர்கோடில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் பிரசாதம் மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வந்த முதலை உயிரிழந்தது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அனந்தபுரா பத்மநாபசுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் பிரசித்தி பெற்ற ஒன்று கோவில் குளத்தில் வாழ்ந்து வந்த பபியா என்னும் முதலை.

பல ஆண்டுகளாக அந்த குளத்தில் வாழ்ந்து வரும் அந்த முதலை பக்தர்கள் தரும் பிரசாதத்தை மட்டுமே உணவாக உண்டு வாழ்ந்து வந்தது. குளத்தில் இறங்கும் பொதுமக்களையும் அது எதுவும் செய்யாமல் இருப்பது ஆச்சர்யத்தை அளித்தது. பவ்யா முதலையை காணவே பலர் பத்மநாபசுவாமி கோவிலுக்கு வருவதும் உண்டு.

கடந்த 77 ஆண்டுகளாக அந்த கோவில் குளத்தில் வாழ்ந்து வந்த பவ்யா தற்போது உயிரிழந்துள்ளது. இது அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவில் முதலையான பவ்யாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் பலரும் பவ்யாவிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Edited By: Prasanth.K