கேரளாவில் இன்று ஒரேநாளில் 38,607 பேருக்கு கொரோனா: அதிர்ச்சியில் சுகாதாரத்துறை
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக சுனாமி போல் கட்டுக்கடங்காமல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தினமும் இருபதாயிரம் முப்பதாயிரம் என கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 38 ஆயிரத்து 607 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளது
மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 48 பேர் பலியாகி உள்ளதாகவும் இதனை அடுத்து கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 5259 என்றும் கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
தமிழகம் போலவே கேரளாவிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றால் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கேரள மாநிலம் போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது