1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 3 அக்டோபர் 2020 (14:09 IST)

சர்வீஸ் செண்டரில் கார் திருட்டு; நள்ளிரவில் சேஸிங்! – திரைப்படத்தை மிஞ்சிய சம்பவம்!

கேரளாவில் சர்வீஸ் செண்டரில் இருந்து காரை திருடி சென்ற திருடனை காரின் உரிமையாளர் இரவோடு இரவாக சேஸ் செய்து பிடித்த சம்பவம் வைரலாகியுள்ளது.

கேரளா மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் எலியாஸ். இவர் தந்து வீட்டில் இருந்தபோது மீனாக்கடி காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது. காரை வேகமாக ஓட்டி வந்ததற்காகவும், நிற்காமல் சென்றதற்காகவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் தனது கார் சர்வீஸ் செண்டரில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் காரை ஓட்டியிருக்கலாம் என்றும் போலீஸாரிடம் தெரிவித்த அவர் சர்வீஸ் செண்டருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போதுதான் சர்விஸ் செண்டரில் இருந்த அவரது காரை ஆசாமி ஒருவன் திருடி சென்றது தெரிய வந்துள்ளது.

வயநாட்டிலிருந்து கிருஷ்ணகிரி – கர்நாடகா நெடுஞ்சாலையில் திருடன் காருடன் தப்பி சென்றுள்ளான். அந்த வழி எலியாஸுக்கு அத்துப்படி என்பதால் தந்து இன்னொரு காரில் தனது ஊழியரையும் அழைத்துக் கொண்டு திருடனை பிடிக்க தானே சென்றுள்ளார். நள்ளிரவு தாண்டியும் தீவிரமாக சேஸிங் செய்த அவர் ஒருவழியாக தனது காரை கண்டுபிடித்தார். ஆனால் அதற்குள் உஷாரான திருடன் காரை நெடுஞ்சாலையிலிருந்து வேறு குறுக்கு வழியில் மாற்றி சென்றுள்ளான். எனினும் விடாமல் துரத்தி சென்ற எலியாஸ் ஒரு கட்டட பணி நடக்கும் இடம் அருகே திருடனை பிடித்துள்ளார். திருடனை அந்த பகுதி போலீசார் கைது செய்த நிலையில், திருடன் தாறுமாறாக ஓட்டியதால் சேதமடைந்த அந்த காரை மீண்டும் சர்வீஸ் செண்டருக்கு அனுப்பியுள்ளார் எலியாஸ்.