கவிதா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத் துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா ஜாமின் மனு மீது இன்று விசாரணை நடந்த நிலையில் இந்த மனுவுக்கு சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கவிதாவின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் அவர் முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு இன்று இரண்டு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மேலும் இந்த மனுவுக்கு பதில் அளிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 20ஆம் தேதி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிலளித்த பின்னர் கவிதாவின் ஜாமீன் மனு குறித்த தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக டெல்லி கலால் முறையீடு வழக்கில் சிபிஐ கடந்த ஏப்ரல் பதினோராம் தேதியை கவிதாவை கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran