சட்டையை கழற்றி சட்டமன்றத்தில் ரகளை! – கர்நாடகா எம்.எல்.ஏ சஸ்பெண்ட்!
கர்நாடக சட்டமன்றத்தில் சட்டையை கழற்றி ரகளை செய்த எம்.எல்.ஏ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக சட்டசபை கூட்டம் சமீபத்தில் நடந்த நிலையில் அதில் ஒரே நாடு ஒரே ஒரே தேர்தல் குறித்த விவாதம் நடைபெற்றது. ஆனால் மத்திய அரசின் இந்த திட்டம் குறித்து சட்டசபையில் விவாதிக்க எந்த விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்டது என எதிர்கட்சியான காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டது.
அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ சங்கமேஸ்வரர் ஆத்திரத்தில் சட்டமன்றத்தில் சட்டையை கழற்றி ஆவேசமாக ரகளை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர்மீது நடவடிக்கை எடுத்த சபாநாயகர் காகேரி அவர் சட்டமன்றத்தில் நுழைய வருகிற 12ம் தேதி வரை 7 நாட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த சம்பவம் நேற்று நடந்த நிலையில் இன்று சட்டசபை வந்த சங்கமேஸ்வரரை காவலர்கள் தடுத்துள்ளனர். இதனால் அவர் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.