செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (15:23 IST)

கர்நாடகாவில் காவல் துறையினர் பேரணி - பின்னணி என்ன??

கர்நாடகாவில் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறையினர் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர். 

 
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல விதிக்கப்பட்ட தடை மற்றும் அதை தொடர்ந்த போராட்டங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ஹிஜாப் தடையை எதிர்த்து இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை எதிர்த்து மாணவர்கள் மற்றும் சிலர் காவித்துண்டு அணிந்து போராட்டம் செய்வது போன்ற நிகழ்வுகளால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில் கர்நாடகாவில் திங்கட்கிழமை முதல் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. கல்லூரி திறப்பு குறித்து விரைவில் நாளைக்குள் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என தெரிகிறது. 
 
திங்கட்கிழமை முதல் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறையினர் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர்.  பொதுமக்கள் மத்தியில் உள்ள அச்ச உணர்வை போக்கவே கொடி அணிவகுப்பு பேரணி நடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.