1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 10 மார்ச் 2020 (19:36 IST)

பழைய சோறு சாப்புடுங்கள்! கொரோனா வராது!!..

பழைய சோறு சாப்பிட்டால் கொரோனா வராது என புதுவை எம்எல்ஏ ஜான் குமார் பேசியுள்ளார்.

சீனாவை தொடர்ந்து 100 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் உலகளவில் இதுவரை 4000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று புதுச்சேரியில் ஒரு விழாவில் கலந்துக் கொண்ட எம்.எல்.ஏ. ஜான்குமார் பேசுகையில், “கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நிறைய வழிகள் இருக்கிறது. கொடுக்காபுளி அல்லது காட்டு நெல்லிக்காய் அல்லது சின்ன வெங்காயத்துடன் பூண்டு சேர்த்து சாப்பிட்டால் கொரோனா வராது” என கூறியுள்ளார்.

மேலும் அவர் “பழைய சோறும், பழவகைகளும் தினமும் சாப்பிட்டால் கொரோனா மட்டுமல்ல, மரணம் கூட வராது, காலையில் அரை மணி நேரம், மாலையில் அரை மணி நேரம் வெயிலில் நிற்கவேண்டும்” என கூறியுள்ளார்.