புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2020 (16:25 IST)

கேரள கொரோனா அபாயம்: சபரிமலைக்கும், திரையரங்குகளுக்கும் தடா!!

கொரோனா வைரஸ் எதிரொலியால் கேரளாவில்  சபரிமலைக்கும், திரையரங்குகளுக்கும் தடா போட்டுள்ளது. 
 
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. அதை தொடர்ந்து மக்கள் அதிகமாக பொது இடங்களில் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தொண்டு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் தங்களால் முயன்ற விழுப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர். திரையரங்குகளில் சினிமா பார்க்க பலமணி நேரங்கள் ஒரெ இடத்தில் அமர்ந்திருக்கும்போது கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் கொரோனா வைரஸ் எதிரொலியால் கேரளாவில் மார்ச் 31ஆம் தேதி வரை சினிமா தியேட்டர்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. கொச்சியில் நடந்த மலையாள திரையுலக அமைப்பினரின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
 
இதேபோல, கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்  சபரிமலையில் மார்ச் 14 முதல் 18 வரை நடைபெறும் மாத பூஜைகளுக்கு பக்தர்கள் வரவேண்டாம் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. ஆனால், சபரிமலை கோயிலில் மாத பூஜை வழக்கம்போல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.