’மாஸ்டர்’ ரிலீஸை கொரோனா தடுக்குமா? திடுக்கிடும் தகவல்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இன்று இந்த படத்தின் ’வாத்தி இஸ் கம்மிங்’ என்ற பாடல் வெளியாகி இணையதளத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் 9-ஆம் தேதி வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இதனை அடுத்து கேரளாவில் வரும் 31-ஆம் தேதி வரை திரையரங்குகள் மூடப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் தமிழகத்திலும் திரையரங்குகள் மூடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஏப்ரல் 9ஆம் தேதி விஜய்யின் ’மாஸ்டர்’ வெளியாக இருக்கும் நிலையில் திரையரங்குகள் திடீரென கொரோனா வைரஸ் பீதியால் மூடப்பட்டால் திட்டமிட்டபடி படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் இந்த படம் ரிலீசாக இன்னும் ஒரு மாதம் இருப்பதால் அதற்குள் கொரோனா வைரஸ் குறித்த பீதி குறைந்துவிட வாய்ப்பு இருப்பதாக படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்