Daily Horoscope

ஜார்கண்ட் தேர்தல்: எக்சிட்போல் முடிவுகள்

Updated: வெள்ளி, 20 டிசம்பர் 2019 (20:27 IST)
ஜார்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனையடுத்து இன்று 5வது கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் எக்சிட்போல் முடிவுகள் வெளியாகியுள்ளது
 
சி வோட்டர் எக்ஸிட் போல் முடிவின்படி ஜார்கண்ட் மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் என்றும், காங்கிரஸ் கட்சி அடங்கிய மகாகட்பந்தன் தனிப்பெரும் கூட்டணியாக உருவெடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கூட்டணிக்கு 35 தொகுதிகளும், பாஜக கூட்டணிக்கு 32 தொகுதிகளும் கிடைக்கலாம் என்று சி வோட்டர் கணித்துள்ளது
 
இந்திய டுடே கருத்துக்கணிப்பின்படி காங்கிரஸ் மற்றும் ஜேஎம்எம்-ஆர்ஜேடி அணி 38 முதல் 50 இடங்களை கைப்பற்றும் என்று கூறியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் மெஜாரிட்டிக்கு 42 தொகுதிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் தொங்கு சட்டசபை அல்லது காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என எக்சிட்போல் கூறியிருப்பது உண்மையா? என்பதி வரும் 23ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்

எல்லாம் காட்டு

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே முன்னேற்பாடுகள்: அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தீவிரம்..

அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை செய்வது லஞ்ச ஒழிப்புத்துறை அல்ல.. அப்படியானால் யார்?

முதல்வர் விஜய்யின் லண்டன் பயண வீடியோக்கள் வட இந்தியாவில் வைரல்.. பிரதம வேட்பாளரின் பலம் கூடுகின்றதா?

பட்டினப்பாக்கம் தலைமை அலுவலகத்திற்கு கடும் எதிர்ப்பு!.. பின் வாங்கும் தவெக அரசு?..

இன்று சென்னை திரும்பும் விஜய்!.. ஒரு வாரத்தில் என்னதான் நடந்தது?.. ஒரு அலசல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments