புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : வியாழன், 31 அக்டோபர் 2019 (08:48 IST)

இன்று முதல் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாகிறது..

கடந்த ஆகஸ்து மாதம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிகிறது.

கடந்த ஆகஸ்து 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான ஆர்டிகிள் 370-ஐ ரத்து செய்து மத்திய அறிவித்து, ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து எதிர்கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டனர். மேலு அப்பகுதிகளில் பதற்றம் காணப்பட்டது.

மத்திய அரசின் அறிவிப்பு படி இன்று முதல் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக இயங்கவுள்ளன. ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு 2019 சட்டத்தின் படி, ஜம்மு காஷ்மீரில் 83 சட்டப்பேரவை தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஜம்மு காஷ்மீருகு கிரீஷ் சந்திரா மர்முவும், லடாக்கிற்கு ஆர்.கே.மாத்தூரும் துணை நிலை ஆளுநர்களாக நியமிக்கப்படுகின்றனர்.