ஜல்லிக்கட்டு அவசர சட்டம் ரத்தாகிறதா? சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சிறப்பு சட்டம் இயற்ற பட்டது என்பதும் இந்த சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று விசாரணை செய்தது. இந்த விசாரணையின்போது இந்த வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பீட்டா அமைப்பு வாதாடியது.
அதேபோல் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல் ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதை எடுத்துரைத்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் நவம்பர் 23ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva