சுப்ரீம் கோர்ட்டின் முக்கிய வழக்கு இனி நேரடி ஒளிபரப்பு: அதிரடி அறிவிப்பு!
சுப்ரீம் கோர்ட்டில் உள்ள முக்கிய வழக்குகள் இனி நேரடியாக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 27ஆம் தேதி முதல் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி லலித் தலைமையில் நேற்று நீதிபதிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய வழக்குகளை நேரடியாக விசாரணை செய்ய முடிவு எடுக்கப்பட்டது என்பதும் வரும் 27ஆம் தேதி முதல் இதை அமல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
முதல் முறையாக யூடியூப் சேனல் வழக்குகளின் விசாரணை நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் வழக்குகள் நேரடியாக ஒளிபரப்பப்படுவதால் வழக்கு சம்பந்தமான அனைத்து தகவல்களும் மக்களுக்கு போய் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது