புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 31 ஜூலை 2019 (20:40 IST)

'ஜொமைட்டோ' செய்தது சரியா? சமூக வலைத்தளங்களில் காரசார விவாதம்!

'ஜொமைட்டோ' நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்த ஒரு வாடிக்கையாளர் டெலிவரி செய்யும் நபர் முஸ்லிம் என்பதால் அந்த உணவை ரத்து செய்வதாகவும் அதற்கு 'ஜொமைட்டோ' நிறுவனம் 'உணவுக்கு மதம் இல்லை' என்றும் 'உணவே மதம்' என்று பதிலடி கொடுத்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது  என்பது தெரிந்ததே. 
 
இந்தச் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் 'ஜொமைட்டோ' நிறுவனத்திற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து காரசாரமான விவாதங்களும் நடத்தப்பட்டு வருகிறது. சமூக வலைதள பயனாளர்கள் சிலர் இதுகுறித்து கருத்து தெரிவித்தபோது 'உணவே மதம்' 'உணவுக்கு மதம் இல்லை' என்று கூறும் 'ஜொமைட்டோ' நிறுவனம் தான் தனது இணையதள பக்கத்தில் 'ஹலால்' செய்யப்பட்ட உணவுகள் வழங்கப்படும் உணவகங்கள் என்று ஒரு பகுதியை வைத்துள்ளது. உணவில் மதம் இருப்பதை விரும்பாத இந்நிறுவனம் 'ஹலால்' செய்யப்பட்ட உணவு என தனியாக ஒரு பகுதி வைக்க வேண்டிய அவசியம் ஏன்? என்று ஒரு டுவிட்டர் பயனாளி கேள்வி எழுப்பியுள்ளார் 
 
அதேபோல் இதற்கு ஹலால் செய்யப்படாத உணவை வழங்கியதாக ஒரு வாடிக்கையாளர் உணவை ரத்து செய்துள்ளதாகவும், அவர் ரத்து செய்த உணவுக்கான பணத்தையும் 'ஜொமைட்டோ' நிறுவனம் திருப்பி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் ஹலால் செய்யப்பட்ட உணவு எனக்கு வேண்டாம் என்று ஒரு பஞ்சாபி மறுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
இவ்வாறு மற்ற மதத்தினர் மதம் குறித்த சில கருத்துக்களை தெரிவித்து உணவு வேண்டாம் என்று மறுக்கப்படும் போது அமைதியாக இருக்கும் 'ஜொமைட்டோ' நிறுவனம், ஒரு இந்து மத வாடிக்கையாளர் மட்டும் வேண்டாம் என மறுக்கும் போது அந்த விசயத்தை பெரிதுபடுத்துவது ஏன்? என டுவிட்டர் பயனாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் 
 
இது குறித்து 'ஜொமைட்டோ' நிறுவனத்திற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல கருத்துக்கள் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டு வருகின்ற நிலையில் இது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதை கமெண்டில் பதிவு செய்யுங்கள்