1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (09:06 IST)

IRCTC ரயில்கள், கேண்டீனில் இனி இதற்கு தடை! – விரைவில் அறிவிப்பு?

IRCTC
நாடு முழுவதும் ரயில்களில் உணவு கேண்டீன் நடத்தி வரும் ஐஆர்சிடிசி கேண்டீனில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகரித்து வருவது பெரும் சுற்றுசூழல் சீர்கேட்டை ஏற்படுத்தி வந்த நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இந்தியா முழுவதும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஐஆர்சிடிசியும் ஈடுபட்டுள்ளது. இதனால் வரும் காலங்களில் ஐஆர்சிடிசி இயக்கும் ரயில்கள் மற்றும் கேண்டீன்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஸ்பூன், தட்டுகள், கரண்டிகள், பார்சல் பாக்ஸ் மற்றும் பிற பிளாஸ்டிக் பயன்பாட்டு பொருட்களும் மாற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பாக்குமட்டை, மரம் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட அட்டைப்பெட்டிகள், கரண்டிகள் போன்ற மாற்று பொருட்களை உபயோகப்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.