சிவனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதா? ஐ.ஆர்.டி.சி. என்ன சொல்கிறது??
காசி மஹாகால் விரைவு ரயிலில் சிவனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதா? என்பது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி. விளக்கம் அளித்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் வாரணாசி, உஜ்ஜைன், ஜான்சி, கான்பூர் வழியாக சிவன் ஸ்தலங்களை இணைக்கும் காசி மஹாகால் என்னும் சிறப்பு ரயில் ஒன்றை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்த ரயிலில் ஏசி வசதியுடன் குறைவான சத்தத்தில் சிவன் பாடல் ஒலிக்கப்படுகிறது. மேலும் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த ரயில் வாரத்திற்கு 3 நாட்கள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ரயிலில் பி-5 கோச்சின் 64 ஆவது இருக்கையை சிவனுக்காக ஒதுக்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இதனை ஐ.ஆர்.சி.டி.சி. மறுத்துள்ளது. ”ரயிலின் தொடக்க ஓட்டம் எந்த தடங்கலும் இல்லாமல் தொடர சிவன் புகைப்படம் வைத்து பூஜை செய்யப்பட்டது” என விளக்கம் அளித்துள்ளது.