புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 6 நவம்பர் 2019 (08:44 IST)

இன்ஃபோசிஸ் எடுத்த அதிர்ச்சியூட்டும் முடிவு..பத்தாயிரம் பணியாளர்கள் வேலை நீக்கம்

ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், பத்தாயிரம் பணியாளர்களை பணியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

தனது நிறுவனத்தின் வருவாயை பெருக்கும் நோக்கில், பிரபல ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், உயர்பதவிகள், மத்திய பதவிகளில் இருக்கும் அதிகாரிகளை  பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனம் பல நாடுகளில் பல கிளைகளை உடைய நிறுவனம். இந்தியாவில் பெங்களூரை தலைமையிடமாக கொண்டுள்ளது. மேலும் சென்னை, புவனேஷ்வர், திருவனந்தபுரம், ஹைதராபாத் உள்ளிட்ட 14 இடங்களில் இதன் கிளை உள்ளது.

இந்நிலையில் 3 மாதங்களில் இந்த நிறுவனத்தை சேர்ந்த பத்தாயிரம் பணியாளர்களின் பணிகளை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக செலவுகளை குறைத்து வருவாயை உயர்த்த அமெரிக்காவின் காக்னிசண்ட் நிறுவனம், 7 ஆயிரம் பணியாளர்களை நீக்க சமீபத்தில் முடிவெடுத்தது. இதே பாணியை பல ஐடி நிறுவனமும் பின்பற்றி வந்த நிலையில் தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனமும் பின்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.