வெற்றி ஊர்வலங்களுக்கு தடை.. மாநில அரசு உத்தரவு

Arun Prasath| Last Modified செவ்வாய், 5 நவம்பர் 2019 (08:40 IST)
அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான தீர்ப்பு, யாருக்கு சாதகமாக வந்தாலும் அது தொடர்பாக வெற்றி ஊர்வலங்களோ, துக்க ஊர்வலங்களோ நடத்தக் கூடாது என உத்தர பிரதேச மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் பல காலமாக வழக்கு நடந்து வரும் நிலையில் கூடிய விரைவில் தீர்ப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வருகிற் 17 ஆம் தேதி ஓய்வு பெறுவதால் அதற்குள் தீர்பு வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

இதனால் இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவது, சமூக நல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கும் என்பதால், தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் அயோத்தி தீர்ப்பு தொடர்பான வெற்றி கொண்டாட்டங்களோ, மவுன ஊர்வலங்களோ நடத்தக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமர் தொடர்பாக எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :