வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : சனி, 2 நவம்பர் 2019 (16:40 IST)

வேலை வாய்ப்பின்மை 3 ஆண்டுகளில் அதிகரிப்பு

இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை 3 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய பொருளாதாரத்தை ஆய்வு செய்யும் Centre of monitoring Indian Economy அமைப்பு, இந்தியாவின் வேலை வாய்ப்பின்மை புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன் படி நகர்புறங்களில் வேலை வாய்ப்பின்மை 8.9 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 8.3 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

மேலும் ஹரியானா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் வேலை வாய்ப்பின்மை 20 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. எனினும் தமிழகத்தில் வேலை வாய்ப்பின்மை 1.1 சதவீதம் தான் அதிகரித்துள்ளது எனவும், இது மிகவும் குறைவான அளவே ஆகும் என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் குறிப்பிடத்தக்கது.