மால்கள், உணவகங்களில் ராமர் கோயிலின் மாதிரியை நிறுவுமாறு மிரட்டிய இந்தூர் மேயர்
இந்தூரியில் உள்ள மால் மற்றும் வியாபார கடைகள் உள்ளிட்ட இடங்களில் ராமர் கோயிலின் மாதிரியை வைக்க வேண்டுமென இந்தூர் மேயர் புஷ்யமித்ர பார்கவ் கூறியுள்ளார்.
அயோத்தியில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது.
இதைக் குறிக்கும் வகையில், இந்தூரியில் உள்ள மால் மற்றும் வியாபார கடைகள் உள்ளிட்ட இடங்களில் ராமர் கோயிலின் மாதிரியை வைக்க வேண்டுமென இந்தூர் மேயர் புஷ்யமித்ர பார்கவ் கூறியுள்ளார்.
இதற்கு யாராவது ஒத்துழைக்க மறுத்தால் இந்தூர் மக்கள் அவர்களுக்கு தக்க பாடம் கற்பிப்பர்கள். இது ராமருக்கும் ராம ராஜ்ஜியத்திற்குமான ஒன்று என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உரிமையயாளர்களால் கிறிஸ்துமஸ் குடிலை நிறுவ முடியும்போது, ராமர் கோயிலின் மாதிரியை வைப்பதில் அவர்களுக்கு எந்த்டப் பிரச்சனையும் இருக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.