வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 31 மார்ச் 2023 (08:48 IST)

இடிந்து விழுந்த படிக்கட்டு; பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு! – ராமநவமியில் சோகம்!

accident
நேற்று ராமநவமி கொண்டாட்டத்தின்போது மத்திய பிரதேசத்தில் உள்ள கோவில் கிணற்றின் படிக்கட்டுகள் இடிந்து விழுந்து பெரும் உயிர்பலி ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நாடு முழுவதும் ராமநவமியை முன்னிட்டு பக்தர்கள் பலரும் கோவில்களுக்கு சென்று விமர்சையாக கொண்டாடினர். மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள பெலெஷ்வர் மகாதேவ் கோவிலில் நேற்று நடைபெற்ற ராமநவமி கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அந்த கோவிலில் உள்ள கிணற்றில் பலர் இறங்கியபோது எதிர்பாராத விதமாக படிக்கட்டுகள் இடிந்து விழுந்தன.

இதில் ஏராளமானோர் தவறி கிணற்றுக்குள் விழுந்தனர். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த மீட்பு படையினர் துரிதமாக மீட்பு படைகளை மேற்கொண்டனர். எனினும் பலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த விபத்தில் பலி ஆனவர்கள் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 35 ஆக உயர்ந்துள்ளது. 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமநவமியில் நடந்த இந்த அசம்பாவிதம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K