புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2020 (11:52 IST)

ரேபிடை விட பிசிஆர்தான் அவசியம்! – மருத்துவ கவுன்சில் விளக்கம்!

ரேபிட் கொரோனா சோதனைகள் தவறாக முடிவுகள் காட்டுவதாக செய்திகள் வெளியான நிலையில் டேபிட் சோதனையை நிறுத்தி வைத்த இந்திய மருத்துவ கவுன்சில் தற்போது சில விளக்கங்களை அளித்துள்ளது.

கொரோனா நோயாளிகளை பரிசோதனை செய்ய சீனாவிலிருந்து லட்சக்கணக்கில் இந்தியா ரேபிட் கிட் கருவிகளை வாங்கியது. ஆனால் அவற்றில் கொரோனா அறிகுறிகள் குறித்த சரியான முடிவுகள் தெரிய வரவில்லை என ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் புகார் தெரிவித்ததையடுத்து இரண்டு நாட்களுக்கு கொரோனா சோதனைக்கு ரேபிட் கிட் பயன்பாடை நிறுத்தி வைக்க இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் ரேபிட் கிட் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. அதில் “கொரோனா இருக்கிறதா என கண்டறிய வழக்கம்போல பிசிஆர் சோதனையையே மேற்கொள்ளலாம். கொரோனாவை கண்டறிய பிசிஆர் டெஸ்ட் அவசியம். ரேபிட் கருவி உடலில் ஆண்டிபாடி எனப்படும் பிறபொருளெதிரி உருவாவதை கண்டறிய பயன்படுகிறது” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.