செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2020 (11:33 IST)

வெளியானது கமல்ஹாசனின் பாடல்! ட்ரெண்டிங்கில் அறிவும் அன்பும்!

கொரோனா ஊரடங்கில் மக்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டி கமல்ஹாசன் எழுதியுள்ள “அறிவும் அன்பும்” பாடல் வெளியாகியுள்ளது.

ஜிப்ரான் இசையில் கமல்ஹாசன் பாடல் வரிகளில் அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, தேவிஸ்ரீ பிரசாத், ஷங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாசன், பாம்பே ஜெயஸ்ரீ, சித்தார்த், லிடியன், ஆண்ட்ரியா, சித் ஸ்ரீராம், முகென் என பல பிரபலங்கள் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் இன்று யூடியூபில் வெளியாகியுள்ளது.

பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே பலரால் இந்த பாடல் பார்க்கப்பட்டுள்ளதுடன், இந்த பாடல் குறித்த ஹேஷ்டேகுகள் இணையத்தில் மெல்ல ட்ரெண்டாகி வருகிறது.