திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2020 (10:22 IST)

விஜய் மாறி இருங்க... சக நடிகர், நடிகைகளுக்கு முதல்வர் ரெக்வெஸ்ட்!!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். 
 
நாடு முழுவதும் கொரோனா வைரஸால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு அரசியல் மற்றும் திரை பிரபலங்களும் நிதியுதவி செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில் நடிகர் விஜய் கொரோனா நிதியுதவியாக ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அதாவது, 
 
பிரதமர் நிவாரண நிதி: ரூ.25 லட்சம்
தமிழக முதல்வர் நிவாரண நிதி: ரூ.50 லட்சம்
கேரள முதல்வர் நிவாரண நிதி: ரூ.10 லட்சம்
பெப்சி அமைப்பு: ரூ.25 லட்சம்
கர்நாடகா முதல்வர் நிவாரண நிதி: ரூ.5 லட்சம்
ஆந்திரமுதல்வர் நிவாரண நிதி: ரூ.5 லட்சம்
தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதி: ரூ.5 லட்சம்
புதுவை முதல்வர் நிவாரண நிதி: ரூ.5 லட்சம்
மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையை ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அனுப்பி ஏழை மக்களுக்கு நேரடியாக உதவி செய்யவும் விஜய் கோரியுள்ளதாக தெரிகிறது. 
 
இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நடிகர் விஜய் கொரோனா நிதியாக புதுச்சேரிக்கு  5 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்று மற்ற நடிகர், நடிகைகளும் புதுச்சேரி மாநில மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.