1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (09:57 IST)

நாடு திரும்பும் இந்திய தூதர்: ஆப்கனில் இந்திய தூதரகம் மூடப்பட்டது

நாடு திரும்பும் இந்திய தூதர்: ஆப்கனில் இந்திய தூதரகம் மூடப்பட்டது
ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்களின் ஆட்சி விரைவில் அமைய இருக்கும் நிலையில் அந்நாட்டில் உள்ள பல நாட்டின் தூதரகங்கள் மூடப்பட்டன. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி இந்திய தூதரகம் மூடப்பட்டதாக தெரிகிறது 
 
இந்திய தூதரகம் மூடப்பட்டது என்றும், இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் உடனடியாக நாடு திரும்புவார்கள் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் ஆப்கானிஸ்தான் தூதர் மற்றும் அதிகாரிகளை அந்நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரவழைப்பதற்காக தனி விமானம் ஒன்று கிளம்பி இருப்பதாகவும் அந்த விமானம் விரைவில் டெல்லி வந்து சேரும் என்றும் கூறப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா உள்பட பல நாடுகள் ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகத்தை மூடி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது