திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 மே 2023 (16:27 IST)

கனடாவில் 17 ஆயிரம் பேருக்கு வேலை தரும் இந்திய நிறுவனங்கள்!

Canada
வெளிநாடுகளில் இருந்து பல நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டு வரும் சூழலில் இந்திய நிறுவனங்கள் பல கனடாவில் காலூன்றியுள்ள செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி இந்தியா உலக மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கிறது. எவ்வளவு மக்கள் தொகையோ அவ்வளவு மக்களுக்குமான அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டிய கடமை அந்த நாட்டு அரசுக்கு உள்ளது. அந்த வகையில் இந்தியாவில் சுயதொழில் தொடங்க இளைஞர்கள் ஊக்குவிக்கப்படுவதோடு, வேலை பற்றாக்குறையை நிறைவு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடும் ஈர்க்கப்பட்டு வருகிறது.

அப்படியான இந்தியாவிலிருந்து வளர்ந்த பல கார்ப்பரேட் நிறுவனங்கள் கனடா நாட்டில் கால் பதித்துள்ளன. இந்தியாவை தாயகமாக கொண்ட 30க்கும் அதிகமான கார்ப்பரேட் நிறுவனங்கள் கனடாவில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளதாக இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கனடாவில் உள்ள 8 மாகாணங்களில் இந்திய நிறுவனங்களில் சுமார் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு முதலீடுகளை ஈர்ப்பது ஒருபக்கம் இருக்க இந்திய நிறுவனங்கள் இவ்வாறு பல நாடுகளில் கால்பதித்து முதலீடு செய்யும் அளவு வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K