30 குழந்தைகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. டெல்லியில் சைக்கோ குற்றவாளி கைது..!
கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 30 குழந்தைகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி புறநகர் பகுதியில் கூலி வேலைக்காக வந்தவர் ரவீந்திர குமார். இவர் போதைக்கு அடிமையாகி அதன்பின் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்ததாக தெரிகிறது.
இதனை அடுத்து டெல்லி புறநகர் பகுதியில் உள்ள தனியாக இருக்கும் வீடுகளுக்கு சென்று அங்கு குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து ஏமாற்றி கடத்திச் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது
அதன் பிறகு குழந்தையை கொன்றுவிட்டு அடுத்து குழந்தையை தேடி சென்று விடுவான். இப்படி ஐந்து ஆண்டுகளில் சுமார் 30 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த சைக்கோ கொலைகாரனை போலீசார் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
அந்த கொலைகாரன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். ஏதுமறியா குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ரவீந்திர குமார் சைக்கோ கொலை வழக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Edited by Mahendran