வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (15:27 IST)

”வெள்ளைக் கொடியுடன் வந்து உடல்களை எடுத்துச் செல்லவும்”.. பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பிய இந்திய ராணுவம்

வெள்ளை கொடியுடன் வந்து தங்கள் நாட்டின் கமாண்டோ படை வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்லுங்கள் என இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தகவல் அனுப்பியுள்ளது.

இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் கமாண்டோ வீரர்கள் 4 பேரை, இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தின. அந்த 4 பேரின் உடல்களிலிருந்து அதிபயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் வெள்ளை கொடியுடன் வந்து தங்கள் நாட்டின் கமாண்டோ வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்லுங்கள் என பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தகவல் அனுப்பியுள்ளது. கடந்த ஜூலை 31 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.