வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 24 ஏப்ரல் 2021 (09:34 IST)

விமானத்தில் கொண்டு செல்லப்படும் ஆக்ஸிஜன் டேங்கர்கள்! – கொரோனா யுத்தத்தில் விமானப்படை!

இந்தியா முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அவசரமாக ஆக்ஸிஜன் கொண்டு செல்ல வேண்டிய பகுதிகளுக்கு விமானப்படை விமானங்கள் மூலம் சப்ளை செய்யப்படுகின்றன.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் இரண்டாம் அலை வேகமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் நாடு முழுவதும் நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இந்நிலையில் ஆக்ஸிஜன் இல்லாத மாநிலங்களுக்கு வேறு மாநிலங்களில் இருந்து டேங்கர் வாகனங்கள், ரயில்கள் மூலமாக ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் அவசர தேவை உள்ள மாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை உடனடியாக கொண்டு செல்ல இந்திய விமானப்படையின் விமானங்கள் களத்தில் இறங்கியுள்ளன, அதன்படி இந்தியாவின் சி17 மற்றும் ஐஎல்76 உள்ளிட்ட கனரக விமானங்கள் ஆக்ஸிஜன் டேங்கர்களை ஹிந்தான் விமானப்படை தளத்திலிருந்து மேற்கு வங்கத்தின் பனாகர் பகுதிக்கு விமானம் மூலமாக கொண்டு சென்றுள்ளன. மேலும் பல மாநிலங்களின் அவசர ஆக்ஸிஜன் தேவைக்கும் விமானப்படை உதவும் என கூறப்படுகிறது.