செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 24 ஏப்ரல் 2021 (08:47 IST)

ஒரு ரூபாய்க்கு ஆக்ஸிஜன் நிரப்பி தரும் நபர்! – உத்தரபிரதேசத்தில் ஆச்சர்யம்!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் நபர் ஒருவர் ஒரு ரூபாய்க்கு ஆக்ஸிஜன் நிரப்பி தரும் செய்தி வைரலாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் தடுப்பாடு ஏற்பட்டுள்ளது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் உத்தர பிரதேசம் ஹமிர்புர் பகுதியை சேர்ந்த மனோஜ் குப்தா என்ற நபர் கொரோனா நோயாளிகளுக்காக ஒரு ரூபாய்க்கு ஆக்ஸிஜன் நிரப்பி தந்து வருகிறார். இதுகுறித்து கூறியுள்ள அவர் தான் மருத்துவமனையில் இருந்தபோது ஆக்ஸிஜன் இல்லாமல் கஷ்டப்பட்டதாகவும், அதனால் அந்த வேதனை புரிவதால் இப்படி உதவுவதாகவும் கூறியுள்ளார்.