புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 செப்டம்பர் 2020 (08:17 IST)

இனி மோதி பாத்துட வேண்டியதுதான்! போருக்கு தயார்! – இந்திய ராணுவம்!

சீனா – இந்தியா இடையே லடாக் எல்லைப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் போருக்கு தயாராக இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

சீனா – இந்தியா ராணுவங்களுக்கு இடையே லடாக் எல்லைப்பகுதியில் கடந்த மாதம் நிகழ்ந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. போரை தவிர்க்க இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் சீனா இந்திய எல்லைக்குள் பல தூரம் ஆக்கிரமித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்கள் முன்பு பாங் சோ ஏரி அருகே ஊடுருவிய சீனப்படைகளை இந்திய ராணுவம் விரட்டியடித்தது.

இந்நிலையில் சீனா இந்தியா மீது போர் தொடுக்க திட்டமிட்டு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் பேசி வருகின்றன. சீன ஊடகம் ஒன்று தற்போது எல்லைப்பகுதியில் குளிர் அதிகரித்து வருவதால் இந்திய ராணுவத்தால் அங்கு தாக்குபிடிக்க முடியாது என்ற ரீதியில் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் வடக்கு பிராந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் ”இந்தியா அமைதியை விரும்பும் நாடு. ஆண்டுதோறும் இந்த மாதங்களில் குளிர் அதிகரித்தாலும் இந்திய ராணுவம் தங்கள் பணியை தொடர்ந்து வருகிறது. சீனா எப்போதுமே போர்கள் இல்லாத வெற்றியை எதிர்பார்க்கிறது. சீனா போர் புரிய விரும்பினால் மிகவும் உறுதியான, எதிர்க்கவியலாத இந்திய வீரர்களுடன் அவர்கள் மோத வேண்டியிருக்கும்” என தெரிவித்துள்ளார்.