ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சூப்பர்ஸ்டார் … மயிரிழையில் உயிர் பிழைத்தார்! ரசிகர்கள் கோபம்!

Last Modified புதன், 16 செப்டம்பர் 2020 (11:05 IST)

ஆசியாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ஜாக்கி சான் தனது புதிய படத்தின் சண்டைக் காட்சியின் போது மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

தனது ஆக்‌ஷன் காமெடி படங்களின் மூலமாக உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் ஜாக்கி சான். தற்போது 66 வயதாகும் அவர் வேன்கார்டு என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக தனது படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்த்து வந்த அவர் இந்த படத்தில் மீண்டும் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பின் சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது படகில் இருந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளார் ஜாக்கி சான். சில நிமிடங்களில் போராடி அவரைக் காப்பாற்றி உள்ளது படக்குழு. ஆனால் இந்த விபத்தால் படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இது சம்மந்தமான வீடியோ வெளியாக இந்த வயதில் இது போன்ற ரிஸ்க்கை ஜாக்கி சான் எடுக்கலாமா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :