ஒருநாள் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இந்தியா: அதிர்சி தகவல்
உலகில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியா ஒரு நாள் கொரோனா பாதிப்பில் முதலிடத்தை பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது எ
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி உலகில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,794,206 என அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸால் இதுவரை 7.2 லட்சம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பில்உலக அளவில் இந்தியா நேற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் புதிதாக 65,156 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக அளவில் ஒருநாள் கொரோனா நோய் பாதிப்பில் உச்சபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியாவை அடுத்து இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும் மூன்றாவது இடத்தில் பிரேசில் நாடும் ஒருநாள் கொரோனா பாதிப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தாலும் ஒரு நாள் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது