வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (10:25 IST)

மீரா மிதுனுக்கு அஜித் ரசிகர்கள் சப்போர்ட்டா? திசை திரும்பும் பிரச்சனை!

நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவை ஆபாசமாக விமர்சித்து வரும் நடிகை மீரா மிதுனுக்கு அஜித் ரசிகர்கள் யாரும் ஆதரவளிக்கவில்லை என்பதை ரசிகர்கள் தெளிவுபடுத்தி வருகின்றனர்.

மீரா மிதுன் விஜய் மற்றும் சூர்யா இருவரையும் மோசமாக விமர்சித்தது சமூகவலைதளத்தில் கொதிநிலையை உருவாக்கியுள்ளது. இதனால் கோபமான அவ்விரு நடிகர்களின் ரசிகர்கள் மீராவை ஆபாச அர்ச்சனையில் மூழ்க வைத்துள்ளனர். அதில் ஒரு சிலர் ஆபாசமாக மீராவை திட்ட இப்போது மீரா பதிலுக்கு சூர்யா மற்றும் விஜய் ரசிகர்களுக்கு எதிராக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் இனிமேல் என்னை ஆபாசமாக பேசினால் ‘நானும் பதிலுக்கு ஜோதிகா மற்றும் சங்கீதாவை ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவேன் (சில ஆபாசமான வார்த்தைகளை சொல்கிறார்). மேலும் என்னைத் திட்டுவதை விட்டு நான் சாதித்த அளவுக்கு நீங்களும் சாதியுங்கள்’ எனக் கூறியுள்ளார். இந்த வீடியோவானது ரசிகர்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது.

இதையடுத்து விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனுக்கு எதிராக சமூகவலைதளங்களில் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அதிலும் ஒரு சிலர் எல்லை மீறி மீராவை ஆபாசமாக விமர்சனம் செய்வது பிரச்சனையை திசை திருப்பும் விதமாக அமைந்துள்ளது. இந்நிலையில் அஜித் ரசிகர்கள் இந்த விஷயத்தில் மீராவுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டது. ஆனால் அதைப் பெரும்பாலான அஜித் ரசிகர்கள் மறுத்துள்ளனர்.

இதனைப் பலரும் தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் தெளிவுப் படுத்தி வருகின்றனர்.