செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (10:10 IST)

இசைதான் என் இயல்பு… கொரோனா லாக்டவுனில் ஸ்ருதி ஹாசன் வெளியிட்டுள்ள பாடல்!

கொரோனா லாக்டவுன் காலத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் தன்னுடைய ஆல்பத்தில் இருந்து ஒரு பாடலை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகையாக அறியப்படும் ஸ்ருதி ஹாசனின் இன்னொரு முகம் இசையமைப்பாளராகும். இப்போது அவரது இசையில் வெளியாக உள்ள ஆல்பத்தில் இருந்து ஒரே ஒரு பாடல் ’எட்ஜ்’ இணையத்தில் வெளியாகியுள்ளது. மொத்த ஆல்பமும் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஸ்ருதிஹாசன் ‘இசை தான் எனது இயல்பு. இசை என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும். எட்ஜ் பாடல் உங்களுக்குள் இருக்கும் குழப்பத்தையும் உங்கள் அன்பின் பகுதிகளையும் வெளிக்கொண்டு வரும்.  மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பதை நீங்கள் நிறுத்தும்போது உங்கள் பயணம் தொடங்கும்’ எனக் கூறியுள்ளார்.