வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2024 (10:40 IST)

காங்கிரஸ் கட்சியில் இணைந்த சுயேச்சை எம்பி.. சதமடித்த காங்கிரஸ் எம்பிக்கள் எண்ணிக்கை..!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் தனியாகவும் இந்தியா கூட்டணி 233 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது என்பது தெரிந்தது. அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி 242 தொகுதிகளிலும் அதன் கூட்டணி 293 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கும் நிலையில் அக்கட்சிக்கு சில சுயேச்சை மற்றும் சிறு கட்சிகளின் எம்பிக்கள் ஆதரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆதரவு இல்லை என்றால் கூட ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையை கிட்டத்தட்ட பாஜக கூட்டணி பெற்றுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் 99 எம்பிக்களை காங்கிரஸ் கட்சி வைத்துள்ள நிலையில் தற்போது ஒரு சுயேட்சை எம்பி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் எண்ணிக்கை 100 ஆக மாறியுள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சங்கிலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட விஷால் பாட்டில் என்பவர் காங்கிரஸில் இணைந்ததன் மூலம் காங்கிரஸ் மூன்று இலக்க எண்ணிக்கையை தொட்டது.

Edited by Mahendran