ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 ஜூன் 2024 (18:08 IST)

பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலர்.. அதிர்ச்சி காரணம்..!

சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேஷ் மாநிலத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜகவை சேர்ந்த கங்கனா ரனாவத்தை பெண் காவலர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. சண்டிகர் விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகை கங்கனா ரனாவத் விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என கூறியதாகவும் அதற்காக தான் அந்த பெண் காவலர் கங்கனா ரனாவத்தை அறைந்ததாகவும் கூறப்படுகிறது 
 
இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் துறைரீதியாக அந்த பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டதை அடுத்து சமாதானமாகிய கங்கனா ரனாவத் அங்கிருந்து சென்றதாகவும் கூறப்படுகிறது 
 
கங்கனா ரனாவத்தை கன்னத்தில் பெண் காவலர் அறைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.
 
Edited by Mahendran