வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 6 ஜூன் 2024 (17:03 IST)

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யார்? ஜூன் 8-ல் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்..!

congress leaders
பல்வேறு விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் வரும் ஜூன் 8ம் தேதி  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பா.ஜ.க. தனியாக 240 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களை கைப்பற்றி 2-வது பெரிய கட்சியாகவும், சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளை கைப்பற்றி 3-வது பெரிய கட்சியாகவும் உள்ளன.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் வரும் 8-ந்தேதி காலை 11 மணிக்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தேர்தல் முடிவுகள், அரசியல் வியூகங்கள், எதிர்க்கட்சி தலைவர் பதவி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 


இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு கட்சியினருக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது