செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 14 மே 2024 (17:18 IST)

டெல்லி IT அலுவலகத்தில் தீ விபத்து.! 7 ஊழியர்கள் பத்திரமாக மீட்பு..!!

IT Fire
டெல்லியில் வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த 7 ஊழியர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
 
டெல்லியில் உள்ள மாநில காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு எதிரில் வருமானவரித்துறை அலுவலகம் உள்ளது. வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த கட்டிடத்தின் 4வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
 
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 21 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்தனர். தீ விபத்து சிக்கிய 7 ஊழியர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இருப்பினும் ஒருவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 
தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை  கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்ற போதும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.