நான் கோழை அல்ல ஒரு போராளி - முதல்வர் மம்தா பானர்ஜி
நான் கோழை அல்ல ஒரு போராளி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
உத்தபிரதேச மா நிலத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஏற்கனவே 5 கட்ட வாக்குபதிவு முடிந்த நிலையில், 111 தொகுதிகளுக்கு 2 கட்ட தேர்தல் நடக்கவுள்ளது.
இந்த தேர்தலில் சமாஜ்வாடி மற்றும் தன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி பிரசாரம் செய்து வருகிறார்.
இன்று வாரணாசியில் அவர் பிரசாரத்தின் போது கூறியதாவது: ரவுடியிச சிந்தனை கொண்டுள்ள பாஜக தொண்டர்கள் என் வண்டியை நிறுத்தினர். எனது காரை கம்பியால் அடித்தபடி, திருபிப்போ எனக் கூறினர். இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். நான் கோழையல்ல நான் ஒரு போராளி எனக் கூறினார்.