கொரோனா பாதிப்பு; 14 நாட்களில் குணமான சிங்கங்கள்! – ஐதராபாத் பூங்காவில் ஆச்சர்யம்!
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஐதராபாத் பூங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கங்கள் குணமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டிலேயே கொரோனா தொற்று மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சில விலங்குகளுக்கும் கண்டறியப்பட்டது. இந்தியாவில் தற்போது இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் ஐதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள 4 ஆண் சிங்கங்கள் மற்றும் 4 பெண் சிங்கங்கள் உள்ளிட்ட 8 சிங்கங்களுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதியானது.
கடந்த 14 நாட்களுக்கு முன்னதாக அவைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் சமீபத்தில் நடத்திய சோதனையில் அவைகளுக்கு கொரோனா இல்லை என உறுதியாகியுள்ளது. சிங்கங்களுக்கு 14 நாட்களுக்குள் கொரொனா குணமானது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.