1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Rajasthan child suffred with black fungus

18 மாத குழந்தைக்கு கரும்பூஞ்சை பாதிப்பு! – ராஜஸ்தானில் அதிர்ச்சி

National
கொரோனாவை தொடர்ந்து கரும்பூஞ்சை தொற்று அதிகரித்துள்ள நிலையில் ராஜஸ்தானில் 18 மாத குழந்தைக்கு கரும்பூஞ்சை தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மறுபுறம் கரும்பூஞ்சை தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் கரும்பூஞ்சை தொற்று அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் மொத்த பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தானில் 18 மாத குழந்தைக்கு கரும்பூஞ்சை தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதன்முறையாக குழந்தை ஒன்றிற்கு கரும்பூஞ்சை நோய் தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
கரும்பூஞ்சை தொற்றுக்கான மருந்துக்கு விலை நிர்ணயம்!