1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 மே 2021 (12:21 IST)

கரும்பூஞ்சை தொற்றுக்கான மருந்துக்கு விலை நிர்ணயம்!

இந்தியாவில் கரும்பூஞ்சை தொற்று அதிகரித்துள்ள நிலையில் அதற்கான மருந்துக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மறுபுறம் கரும்பூஞ்சை தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் கரும்பூஞ்சை தொற்று அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் மொத்த பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்க வர்தா நிறுவனத்தின் ஆம்போடெரிசின் மருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மருந்திற்கான விலை ரூ.2,100 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த மருந்து விநியோகிக்கும் பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது.