வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (09:11 IST)

அரசு பேருந்தை திருடி 'காயிலான்' கடையில் விற்ற சகோதரர்கள் கைது!

ஐதராபாத்தில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அரசு பேருந்தை திருடி சென்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள காயிலான் கடையில் விற்பனை செய்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
ஐதராபாத் பேருந்து நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து ஒன்று கடந்த 24ஆம் தேதி திடீரென காணாமல் போனது. இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்தபோது இரண்டு இளைஞர்கள் அந்த பேருந்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்திய நிலையில் பேருந்தை திருடிய அந்த இருவரும் அடையாளம் காணப்பட்டனர்.
 
இதனையடுத்து அந்த இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தபோது, திருடி சென்ற பேருந்தை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு காயிலான் கடையில் ரூ.60 ஆயிரத்திற்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் அந்த இருவரையும் அழைத்து கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அந்த காயிலான் கடைக்கு சென்று பேருந்தின் உடைக்கப்பட்ட பாகங்களை கைப்பற்றினர். காயிலான் கடை உரிமையாளரையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.