வேலைக்கு போகச் சொன்ன மனைவியை கொன்ற கணவர் !
புனேவில் உள்ள விஸ்ராந்த் வாடியில் வசித்து வந்தவர் தியானேஷ்வர் சமீப காலமாகவே வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துவந்துள்ளார்.
இந்நிலையில் அவரது மனைவி ரமாபாய் அருகில் உள்ள வீடுகளூக்குச் சென்று பாத்திரம் கழுகி சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்திவந்துள்ளார்.
இந்நிலையில் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே கணவனுக்கும், மனைவிக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.இந்த வாக்குவாதம் முற்றியதால் ஆவேசம் அடைந்த தியானேஷவர், ராமாபாயை ஒரு இரும்புக் கம்பியை எடுத்து அடித்தார்.
இதில் படுகாயமடைந்த ராமாபாய் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். பின்னர் அவரை கிசிச்சைகாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்துவந்த போலீஸார், கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தியானேஷ்வரை கைது செய்து செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.