1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 4 டிசம்பர் 2018 (11:51 IST)

எய்ட்ஸ் பாதித்த பெண்ணை நீக்கிய நிறுவனம்: கடைசியில் நடந்த திருப்பம்

எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட பெண்ணை நிறுவனத்தில் இருந்து விளக்கிய நிறுவனம் மீது அந்த பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி கண்டுள்ளார்.
புனேவை சேர்ந்த பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போகவே, அவர் விடுப்பு எடுத்துள்ளார்.
 
ஹாஸ்பிட்டலுக்கு சென்று செக்கப் செய்தபோது அவர் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அவர் மிகுந்த வருத்ததிற்கு தள்ளப்பட்டார்.
 
பின்னர் நிறுவனத்திற்கு சென்ற அவரிடம், மெடிக்கல் ரிப்போர்ட் கேட்கப்பட்டது. அதன்படி அவர் தனது மெடிக்கல் ரிப்போர்ட்டை சமர்பித்துள்ளார். அந்த பெண் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த நிறுவனம் அவரை உடனடியாக வேலையிலிருந்து தூக்கிவிட்டனர். 5 வருடம் அந்த நிறுவனத்தில் வேலை செய்த ஊழியரை அந்த நிறுவனம் சட்டென நீக்கிவிட்டது.
 
இதையடுத்து அந்த பெண் இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையிட்டார். மூன்று வருடமாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வெளியாகியது. அந்த நிறுவனம் செய்தது சட்டப்படி குற்றம் எனவும் அந்த பெண்ணை மீண்டும் கம்பெனியில் சேர்த்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.