1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2023 (16:29 IST)

இந்தியாவின் மக்கள் தொகை எவ்வளவு? சீனாவை விட அதிகமா? உள்துறை அமைச்சகம் பதில்

population
இந்தியாவின் மக்கள் தொகை எவ்வளவு என்று நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. 
 
தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 139 கோடியே 23 லட்சத்து 29 ஆயிரம் ஆக உள்ளது என கூறப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஜூலை ஒன்றாம் தேதி கணக்கின்படி சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 56 லட்சத்து 76 ஆயிரம் ஆக உள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
இதனை அடுத்து இந்தியாவின் மக்கள் தொகை சீனாவின் மக்கள் தொகையை விட சுமார் 3 கோடி குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில ஊடகங்களில் இந்தியாவின் மக்கள் தொகை சீன மக்கள் தொகையை விட அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டிருந்த நிலையில் மதிய உள்துறை அமைச்சகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran