வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2024 (14:48 IST)

அதிரடி அறிமுக சலுகையுடன் HMD Crest 5G Series! நோக்கியா மாதிரியே சாதனை படைக்குமா?

HMD Crest
பிரபலமான நோக்கியா ஃபோன்களை தயாரித்த HMD நிறுவனம் தனது புதிய HMD Crest 5G மற்றும் HMD Crest Max 5G மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.



இந்தியாவில் 90கள் முதலாக பிரபலமாக இருந்த ஃபோன் நிறுவனம் நோக்கியா. பின்லாந்தை சேர்ந்த ஹெம்டி நிறுவனம் இந்த நோக்கியா ஃபோன்களை தயாரித்து வந்த நிலையில் 2014ம் ஆண்டில் நோக்கியாவின் உரிமையை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்றது. பின்னர் 2016ல் மீண்டும் நோக்கியா நிறுவனத்தை வாங்கியதோடு முழு மூச்சாக பல சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது.

தற்போது இந்தியாவில் நேரடியாக HMD என்ற தனது ப்ராண்ட் பெயரிலேயே HMD Crest 5G மற்றும் HMD Crest Max 5G ஆகிய மாடல்களை அறிமுகம் செய்கிறது. பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன்களை அறிமுக சலுகையாக மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய உள்ளது ஹெச்.எம்.டி நிறுவனம். இந்த இரு மாடல்களிலும் கேமரா, ரேம், மெமரி தவிர அனைத்து சிறப்பம்சங்களும் பொதுவாகவே உள்ளன.

HMD Crest 5G மற்றும் HMD Crest Max 5G பொதுவான சிறப்பம்சங்கள்:
 
  • 6.67 இன்ச் OLED டிஸ்ப்ளே
  • ஆக்டாகோர் ப்ராசஸர்
  • யுனிசாக் T750 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 14
  • 1 டிபி வரை சப்போர்ட் செய்யும் மெமரி கார்டு ஸ்லாட்
  • 3 பேண்ட் 5ஜி நெட்வொர்க், வைஃபை, ப்ளூடூத்
  • 5000 mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங்

இதில் HMD Crest 5G ல் 6 ஜிபி ரேம் + விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி இண்டெர்னல் மெமரி, 50 எம்பி + 2 எம்பி ப்ரைமரி டூவல், கேமரா, 50 எம்பி முன்பக்க கேமரா ஆகியவை உள்ளது.

HMD Crest Max 5G மாடலில் 8 ஜிபி ரேம் + விர்ச்சுவல் ரேம், 256 ஜிபி இண்டெர்னல் மெமரி, 64 எம்பி + 5 எம்பி + 2 எம்பி ப்ரைமரி ட்ரிபிள் கேமரா, 50 எம்பி செல்பி கேமரா உள்ளது.

இரண்டு மாடல்களுமே மிட்நைட் ப்ளூ வண்ணத்தில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக HMD Crest 5G மாடல் ரூ.12,999க்கும், HMD Crest Max 5G மாடல் ரூ.14,999க்கும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K